விசாரணைக்கான கதவு திறப்பு ராகுல் காந்தி டிவீட்

ரபேல் சீராய்வு மனுக்களை விசாரித்த அமர்வில் இடம் பெற்ற நீதிபதி  கேம்எம்.ஜோசப் தனது தீர்ப்பில், ‘இந்த வழக்கில் நீதிபதி கவுல் அளித்துள்ள தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களை நான்  ஏற்கிறேன். அவற்றை அவர் சரியான காரணங்கள் மூலம்  விளக்கி இருக்கிறார்,’ என்று குறிப்பிட்டுள்ளார். நீதிபதி ஜோசப்பின் இந்த கருத்தை குறிப்பிட்டு ராகுல் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘உச்ச நீதிமன்ற நீதிபதி கேஎம்.ஜோசப், தனது தீர்ப்பின் மூலம் ரபேல் ஊழல் குறித்த விசாரணைக்கான ஒரு பெரிய கதவை திறந்துள்ளார். இந்த விசாரணை இனி, முழு ஆர்வத்துடன் தொடங்கப்பட வேண்டும். நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் இந்த ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். ‘ரபேலில் பாஜ பொய் சொல்கிறது’ என்ற ஹேஷ்டேக்குடன் இதை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Related Stories:

>