பதவிக்காக ‘இறங்கிய’ உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் இருந்த சிவசேனாவும் பா.ஜ.வும் முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளன. சிவசேனா மகாராஷ்டிரா அரசியலில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கவேண்டும் என்பதற்காக போராடி வருகிறது.

ஒரு காலத்தில் பால் தாக்கரேயை சந்திக்க எல்.கே.அத்வானி, சரத் பவார், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, பிரமோத் மகாஜன், விலாஸ்ராவ் தேஷ்முக், ரஜினிகாந்த் போன்றோர் மாதோஸ்ரீ இல்லத்திற்கு செல்வதுதான் வழக்கமான நடைமுறையாக இருந்தது.  அதோடு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூட ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு  கேட்டு பால் தாக்கரேயை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசினார். எந்த சூழ்நிலையிலும் பால் தாக்கரே அரசியல்வாதிகளை தனது வீட்டை தாண்டி வெளியில் சந்தித்து பேசியது கிடையாது. ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை உத்தவ் தாக்கரே தனது வீட்டில் இருந்து வெளியில் சென்று ஓட்டல்களில் சந்தித்து பேசி வருகிறார்.

Related Stories:

>