130வது பிறந்த நாள் ஜவஹர்லால் நேருவுக்கு தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வனத்தில்  காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்பி.க்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர், நேரு நினைவிடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertising
Advertising

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ‘நமது முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். நேருஜி, ராஜதந்திரி, தொலைநோக்கு பார்வையாளர், அறிஞர், நிறுவன கட்டமைப்பாளர் மற்றும் நவீன இந்தியாவின் சிறந்த கட்டமைப்பாளர், என்று பதிவிட்டுள்ளார். மேலும், ‘நேருஜியை நினைவு கூர்கிறேன்’ என்ற ஹேஸ்டேக்கையும் அவர் இணைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி ெசலுத்துகிறேன்,’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: