தண்ணீர் உரிமையை பாதுகாக்கவும் : முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்து, தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>