×

விவசாயம் பக்கமெல்லாம் வர்றதே கிடையாது ‘இளைஞர்கள் அரைகுறையா படிச்சு ஆப், குவார்ட்டர் அடிக்கிறாங்க...’: அமைச்சர் பாஸ்கரன் மீண்டும் சர்ச்சை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூர் கிராமிய பயிற்சி மையத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மாவட்ட உயர்தொழில்நுட்ப காய்கறி சாகுபடி கருத்தரங்கம் ேநற்று நடந்தது. இதில் பங்கேற்று கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:முன்பு எல்லாம் மாடுகளை வைத்து ஏர் பூட்டி விவசாயம் செய்யப்பட்டது. அதிக உடல் உழைப்பு இருந்ததால் யாருக்கும் எந்த நோயும் வரவில்லை. குடும்பத்துடன் விவசாய பணிகள் பார்த்ததால் லாபம் கிடைத்தது. தற்போது ஒரு ஏக்கர் நடவு செய்ய ரூ.18 ஆயிரம் வரை செலவாகிறது. செலவு செய்தும் விளையுமா என்ற நம்பிக்கை இல்லை. மழை பெய்தால்தானே விளையும். சில நேரங்களில் செலவு செய்து கடனாளியாகி போகிறோம். விவசாய பணிக்கு இளைஞர்கள் வருவது கிடையாது. படிக்க வைத்தாலும் அரையும் குறையுமாக படித்து ஆப், குவார்ட்டர் அடிக்கின்றனர். ஆண்களில் 100 பேருக்கு 20 பேர் தான் நன்றாக படிக்கின்றனர். பெண்கள் தான் நன்றாக படிக்கின்றனர். செல்போன் அதிகளவில் கெடுக்கிறது. வெளிநாடுகளில் என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. புதிய யுக்திகளை கடைபிடித்து விவசாயத்தில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

‘பொதுவா சொன்னேங்க’
விஜயகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியது குறித்து அமைச்சர் பாஸ்கரனிடம் கேட்டபோது, ‘‘நடிகர்களை பற்றி பொதுவாக சொன்னேன். தவறாக எதுவும் சொல்லவில்லை. எங்கள் கூட்டணியில கூட நடிகர் கட்சி இருக்கு. செல்போன் இளைஞர்களை கெடுக்கிறது. படிக்கும் போது பெற்றோர் செல்போனை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். 2 வயது, 5 வயது குழந்தைகள் கூட செல்போனை பயன்படுத்துகிறது. செல்போன் வாங்கி தரும்போதே நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தும்படி கூற வேண்டும்’’ என்றார்.

Tags : Farming, Young people, App, quartet, beating ...
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...