கிராம உதவியாளர் நியமனத்தில் முறைகேடு; தாசில்தார் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி:    கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டாலம், வீரசோழபுரம், குரூபீடபுரம், உள்ளிட்ட 5 கிராமங்களில் காலியாக உள்ள வி.ஏ.ஓ. பணியிடம் நிரப்புவதற்கு கடந்த ஜூைலயில் அறிவிப்பு வெளியானது. இதற்கு முைறயான நேர்காணல் நடத்தப்படாததால் சார் ஆட்சியர் அனுமதி மறுத்தார். இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு செப்டம்பர் 21 ம்தேதி வெளியானபிறகு, தாசில்தார் தயாளன் அவசர அவசரமாக முன்தேதியிட்டு அதாவது செப்.18 ம்தேதி 5 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கியதாகபுகார் எழுந்தது.இதுகுறித்து சார் ஆட்சியர் காந்த் நடத்திய விசாரணையில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால், தாசில்தார் தயாளனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: