இப்பல்லாம் நாங்க பிளக்ஸ், பேனர் வைக்கிறதில்லை கோவையில விழுந்தது பழைய கொடிக்கம்பங்க...: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

விருதுநகர்: இப்போது நாங்க பிளக்ஸ், பேனர் வைக்கிறதில்லை, கோவையில் விழுந்தது பழைய கொடிக்கம்பம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.1.05 கோடியில் கட்டப்பட்டுள்ள போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி :ஆவின் பால் பாக்கெட்களில் திருவள்ளுவரின் படம் இடம் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும். பாஜவின் கோரிக்கையை ஏற்று திருக்குறள் அச்சிடும் முடிவு எடுக்கப்பட்டதா என கேள்வி கேட்கிறீர்கள்.

பாஜ என்ன நாட்டுக்கு ஆகாத கட்சியா? நல்ல கருத்துக்களை அவர்கள் சொன்னால் கேட்கக்கூடாதா? பாஜ மத்தியில் ஆளும் கட்சி. அவர்களின் பலம் என்ன என்பது பாஜவிற்கு தெரியும். உள்ளாட்சி தேர்தலில் பாஜவுடனான கூட்டணி தொடரும். அதிமுக சார்பில் தற்போது எங்கும் பிளக்ஸ், பேனர்கள் வைப்பதில்லை. கோவையில் விழுந்தது பழைய கொடிக்கம்பம். அந்த சம்பவத்திற்கு (விபத்தில் இளம்பெண் படுகாயம்) நாங்கள் ஏற்கனவே வருத்தம் தெரிவித்து விட்டோம்.கமல், ரஜினி போன்று எந்த நடிகர் மீதும் நாங்கள் காட்டத்தை காட்டுவதில்லை. அவர்களது கருத்துக்கு பதில் அளிக்கிறோம். இருவரது படங்களையும் நான் விரும்பி பார்ப்பேன். ரஜினி படங்களை அதிகம் விரும்பி பார்ப்பேன். சிவாஜி குறித்த முதல்வரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சிவாஜிகணேசன் இயக்கம் ஆரம்பித்து, அதில் வெற்றி பெறவில்லை என்றுதான் சொன்னார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>