மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி, சகோதரிக்கு 3 நாள் பரோல்

மதுரை: சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க சிறையில் உள்ள அவரது மனைவி, தங்கைக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், கல்லக்காட்டுவலசு அருகே குமாரபாளையத்தை சேர்ந்த அன்பரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கேரளாவில் கடந்த மாதம் 29ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகம் இறுதி சடங்கில் பங்கேற்க சிறையில் உள்ள அவரது சகோதரி சந்திரா, மனைவி கலா ஆகியோருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

Advertising
Advertising

இந்த மனுவை நேற்று நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அளித்த உத்தரவில், இருவருக்கும் 3 நாள் பரோல் வழங்கப்படுகிறது. உடனடியாக திருச்சி சிறையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.  3 நாள் பரோல் முடிந்து இருவரும் 17ம் தேதி (ஞாயிறு) மாலை 5.30 மணிக்கு திருச்சி சிறைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: