சேலம் தனியார் பள்ளி விழாவில் 29 இரட்டை பெண் குழந்தைகள் கவுரவிப்பு

சேலம்: குழந்தைகள் தினத்தையொட்டி சேலம் தனியார் பள்ளியில் 29 இரட்ைட பெண் குழந்தைகள்  மேடையில் கவுரவிக்கப்பட்டனர்.குழந்தைகள் தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்த வகையில், சேலம் பெரமனூரில் உள்ள குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா  நேற்று கொண்டாடப்பட்டது.

Advertising
Advertising

இவ்விழாவையொட்டி எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை, இந்த பள்ளியில் 29 இரட்டை பெண் குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, கடந்த ஒரு வாரமாக அவர்களுக்கு  இசைக்கேற்ப நடனமாடும் பயிற்சியை பள்ளி ஆசிரியைகள் கற்றுக்கொடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று நடந்த குழந்தைகள் தின விழாவில் 29 இரட்டை பெண் குழந்தைகளும், 3600 பள்ளி மாணவிகள் மத்தியில் அணிவகுப்பு நடத்தி மேடைக்கு  அழைத்து வந்தனர். ஒவ்வொரு இரட்டை குழந்தைகளும் ஒரே மாதிரியான உடை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தனர். மேலும் இசைக்கேற்ப அவர்கள் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

Related Stories: