ரயில்வே பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்புக்கு ‘மிளகு ஸ்பிரே’

நாகர்கோவில்: நாடு முழுவதும் ரயில்வேயில் 14 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில்3சதவீதம் ஊழியர்கள் பெண்கள். இவர்கள் அலுவலக பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலகம் தவிர பிற பகுதிகளில் பணியாற்றுகின்ற  பெண் பணியாளர்கள் பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக  புகார்கள் எழுந்தன. மேலும்,ரயில்வே கேட்டுகள், யார்டுகளில் பணியாற்றுகின்ற பெண் பணியாளர்கள் பலர், மது  போதையில் இருப்பவர்களால் கடும் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். இதைதடுக்கும் வகையில் ரயில்வே ஸ்டேஷன்களில் செலவுக்காக வழங்கப்படுகின்ற நிதியில் இருந்து பெண் பணியாளர்களுக்கு மிளகு ‘ஸ்பிரே’ வாங்கி  பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Advertising
Advertising

Related Stories: