திடீரென காணாமல் போன பாடகி சுசித்ரா நட்சத்திர ஓட்டலில் மீட்பு: தங்கை கொடுத்த புகாரில் போலீஸ் நடவடிக்கை

சென்னை:  சென்னை அடையாறு காந்தி நகரை சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா(39). தனது வசிய குரலால் தனக்கு என தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  நடிகரும் இயக்குநருமான கார்த்திக்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.இதற்கிடையே சுசித்ரா டிவிட்டரில் ‘சுசிலீக்’ என்ற பெயரில் பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியாகியது. இது சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து கணவர்  கார்த்திக்கை விவாகரத்து செய்தார் சுசித்ரா விவாகரத்தாகி தற்போது தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், சுசித்ராவின் தங்கை சுஜிதா(37) என்பவர், கடந்த 11ம் தேதி அடையாறு காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.  அந்த புகாரில், எனது அக்கா, பிரபல திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா(39) கடந்த ஒரு வருடமாக அடையாறு காந்திநகரில் வசித்து வருகிறார். கடந்த 11ம் ேததி இரவில் இருந்து அவரை காணவில்லை. அவரை செல்போனிலும் தொடர்பு  கொள்ளமுடியவில்லை. எனவே எனது அக்கா சுசித்ராவை கண்டுபிடித்து தரும் படி புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் பாடகி சுசித்ராவை தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் பாடகி சுசித்ரா அடையாரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தது தெரியவந்தது. உடனே  போலீசார் ஓட்டலுக்கு சென்று பாடகி சுசித்ராவை மீட்டனர். அவர் சற்று மனமுடைந்த நிலையில் இருந்ததால் அவரது சகோதரி சுஜிதா கேட்டு கொண்டதன்படி போலீசார் சுசித்ராவை மனநல மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனைக்காக  அனுமதித்துள்ளனர். இருந்தாலும் போலீசார் கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாடகி ஒருவர் 3 நாட்கள் மாயமாகி மீட்கப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கை, அவரது கணவரால் ஆபத்து: காவல் நிலையத்தில் புகார்

மாயமானது குறித்து பாடகி சுசித்ராவிடம் கேட்டபோது, “என்னை கடந்த ஒரு வருடமாக எனது தங்கை சுஜிதா அவரது கணவருடன் சேர்ந்து நான் எதை செய்தாலும், மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது போல் சித்தரித்து மருத்துவமனையில் இருந்து  10 பேரை அழைத்து வந்து சிகிச்சை என்று தொல்லை கொடுக்கின்றனர். நான் வீட்டைவிட்டு வெளியே சென்றால், தற்கொலை செய்து கொள்ள செல்கின்றேன் என்று தொந்தரவு செய்கின்றனர். எனக்கு அவர்களால் தான் ஆபத்து. எனவே என்  தங்கை மற்றும் அவரது கணவரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அடையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். என்னை யாரும் கடத்த வில்லை. நான் மன நிம்மதிக்காக வீட்டை விட்டு வெளியேறி ஓட்டலில்  தங்கியிருந்தேன். எனக்கு போலீசோ அல்லது தங்கை சுஜித்தாவோ போன் செய்து இருந்தால் இவ்வளவு பிரச்னை இருந்து இருக்காது என்றார்.

Related Stories: