வருசநாடு அருகே பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க கோரி முற்றுகை

வருசநாடு: வருசநாடு அருகே சிங்கராஜபுரத்தில் பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ேகாரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி சார்பில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால், சில மாதங்களாக இந்த சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இது குறித்து சிங்கராஜபுரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மயிலாடும்பாறை ஒன்றிய நிர்வாகத்திடம் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்ைல.

இந்நிலையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, மகளிர் சுகாதார வளாகம் முன்பு திரண்டு அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சி செயலாளர் ராமசாமி, ஒன்றிய ஆணையாளர் கருப்புசாமி ஆகியோர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>