×

அடர்ந்து வளரும் செடிகளால் சுற்றுச்சுவருக்கு பாதிப்பு: பராமரிப்பில்லாத பணகுடி ராமலிங்கசுவாமி கோயில்

பணகுடி: பணகுடியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உத்தமபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட ராமலிங்க சுவாமி-சிவகாமியம்மாள் மற்றும் நம்பி சிங்க பெருமாள் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயில் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இக்கோயில் சார்ந்த பணிகளை பார்க்கவும் பராமரிக்கவும் 15பேர் பணிபுரிந்து வந்தனர். ஆனால் தற்போது ஒரு பணியாளர் மட்டுமே அனைத்து பணிகளையும் பார்க்க வேண்டி உள்ளது. மேலும் தற்போது வரை நிர்வாக அலுவலரும் நியமிக்காமல் வள்ளியூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் இருந்து பொறுப்பில் இருந்துவிட்டு அவ்வப்போது வந்து செல்கின்றனர். இதனால் பணகுடி கோயில் தற்போது ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பக்தர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.மேலும் கோயிலில் துர்நாற்றம் வீசி வருவதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.

கோயில் உட்பிரகாரத்தில் அதிகமாக புற்களும், முட்செடிகளும் வளர்ந்து காணப்படுவதால் உள்பிரகாரத்தில் பக்தர்கள் விசாலமாக சுவாமி தரிசனம் செய்யமுடியாத நிலை உள்ளது.வெளிப்புறத்தில் உள்ள சுற்றுச்சுவர் பழுதடைந்து அனைத்து பகுதியிலும் மரங்கள் வளர்ந்து காட்சியளிக்கிறது. அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து பார்த்தால் மாடிதோட்டம் போல காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சுவர் விரிசல் விழுந்து கீழே விழும் நிலை உள்ளது. அரசர் காலங்களில் கட்டப்பட்ட பல கோயில்கள் பழுதடைந்து காட்சி பொருளாக இருக்கும் வரிசையில் விரைவில் பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலும் வரிசைபடுத்தபட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதற்கு இதுவும் காரணமாக உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : Impact, Paanagudi, Ramalingaswamy Temple
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்