ரஷ்யாவில் கல்லூரி மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்

மாஸ்கோ: ரஷ்யாவில் கல்லூரி மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ரஷ்ய அதிகாரிகள் தரப்பில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 3,500 மைல்களுக்கு அப்பால் உள்ள கிழக்குப் பகுதியில் பிளாங்காவிஷ்சென் நகரம் உள்ளது. இங்குள்ள கல்லூரியில் 19 வயதான மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சட்டங்கள் கடுமையாகக் கொண்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும். கடுமையான துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்ட ரஷ்யாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் துப்பாக்கிச் சூடு நடப்பது மிகவும் அரிதானது.

இந்நிலையில் கல்லூரி மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை ரஷ்ய விசாரணைக் குழு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: