வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதனை: சொந்த மண்ணில் வேகமாக 250 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர்

இந்தூர்: இந்தூரில் நடந்து வரும் வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டினார். வங்காளதேச அணிக்கெதிராக முதல் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன் உள்நாட்டளவில் 250 விக்கெட்டுகள் அதற்கு மேல் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகிய இருவர் மட்டுமே வீழ்த்தி இருந்தனர். இப்போது உள்நாட்டில் மட்டும் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை அஸ்வின் பெற்றார். அதுமட்டுமல்லாமல் வேகமாக 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வகையில் மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். முதல் விக்கெட்டாக மொமினுல் ஹக்கை க்ளீன் போல்டு மூலம் வீழ்த்தினார். இது அஸ்வினுக்கு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டில் கைப்பற்றிய 250-வது விக்கெட்டாகும். இந்த விக்கெட்டுக்களை வீழ்த்த அவருக்கு 42 போட்டிகளே தேவைப்பட்டது. இதன்மூலம் சொந்த மண்ணில் அதிகவேகமாக 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முரளிதரனுடன் பகிர்ந்துள்ளார். அனில் கும்ப்ளே 43 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். ரங்கணா ஹெராத் 44 போட்டிகளிலும், ஸ்டெயின் 49 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 51 போட்டிகளிலும் 250 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

Related Stories: