விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தை நெல்லை மாவட்டத்தில் நவ 21ம் தேதி வரை வெளியிட தடை

சென்னை : விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தை நெல்லை மாவட்டத்தில் நவ 21ம் தேதி வரை வெளியிட தடை மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாளை வெளியாக உள்ள நிலையில் நெல்லையில் மட்டும் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் பிக்சர்ஸிடம் லிப்ரா நிறுவனம் கடனாக பெற்ற ரூ.15 லட்சத்தை திருப்பி வழங்கவில்லை என புகார் கூறப்படுகிறது. 2013ம் ஆண்டு 15 லட்சம் வழங்க வேண்டியது தொடர்பாக லிப்ரா நிறுவனத்திற்கு எதிராக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: