×

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: சபரிமலை செல்ல தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜைக்காகத் தொடர்ந்து 60 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதன்படி நாளை தொடங்கி வரும் ஜனவரி 20ம் தேதி வரை அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் இருந்து 55 பேருந்துகளும், திருச்சி, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து தலா 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து 3 பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibibo.com உள்ளிட்ட இணையதள முகவரிகள் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பேருந்துகள் பற்றிய விவரங்களையும் 9445014412, 9445014450, 9445014424, 9445014463, 9445014416 உள்ளிட்ட செல்போன் எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவித்துள்ளது.

Tags : pilgrims ,Sabarimala ,Tamil Nadu Transport Corporation Announcement , Sabarimalai, pilgrim, special bus, Tamil Nadu Transport Corporation
× RELATED ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த...