கழிவு அகற்றும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பு தமிழகம் முதலிடம் என்பது தலைகுனிவு : நவீன கருவி உருவாக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோரில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு, இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நவீன கருவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில், கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல் இன்று வரை 206 பேர். இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு.

இதில் திமுக ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல, அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை. நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும், அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: