வேலைவாய்ப்பு அடிப்படையில் கிரீன் கார்டு வழங்குவதில் வேறுபாடுகள் நீக்கப்படும்: அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் பிரசாரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரீஸ் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். இதற்காக, அக்கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கமலா ஹாரீஸ் ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசிபிக் தீவுகளுக்கு சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு அடிப்படையில் கிரீன் கார்டு வழங்குவதில் அமெரிக்கா பின்பற்றி வரும் கொள்கை, நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அது, புலம் பெயர்ந்து வந்த வெளிநாட்டினரை அதிகமாக பாதிக்கிறது. 2018ம் ஆண்டு கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 8 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 95 சதவீதம் பேர், ஆசியா, சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளில் இருந்து வந்தவர்கள். கிரீன் கார்டு வழங்குவதில் உள்ள பாரபட்சமான கொள்கைகள் அகற்றப்பட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் நமது நாட்டில் தங்கி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பை செலுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>