கார் குண்டு வெடித்து ஆப்கனில் 7 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் தனியார் நிறுவன காரின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் நேற்று காலை வழக்கம்போல் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. அப்போது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட மினி வேன் ஒன்றின் மூலம், அந்த பகுதியில் சென்ற தனியார் கனடா பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கார் லாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரண்டு வாகனங்களும் வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் 4 வெளிநாட்டினர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் மாசவுத் அன்டராபி கூறுகையில், “இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். இதில், பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த வெளிநாட்டினர் 4 பேர். பள்ளிக்கு சென்ற 13 வயது குழந்தையும் இறந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி, சிறையில் இருக்கும் 3 தலிபான்கள் விடுவிடுக்கப்படுவார்கள் என சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>