ஏடிபி டூர் பைனல்ஸ் அரை இறுதியில் தீம்

லண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஜான் போர்க் பிரிவு லீக் ஆட்டத்தில், நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்திய ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் அரை இறுதிக்கு முன்னேறினார். தனது 2வது லீக் ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சுடன் (2வது ரேங்க்) மோதிய தீம் 5-7 (6-7), 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 7-6 (7-2), 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினியை (8வது ரேங்க்) வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். இதையடுத்து பெடரர் - ஜோகோவிச் இடையே நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் வீரரே அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: