×

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் ரூ.30 லட்சம் உண்டியல் காணிக்கை

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.30 லட்சம் கிடைத்தது. தென் தமிழகத்தில் புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலும் ஒன்று. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோயிலில், ஒவ்வொரு மாதமும் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணப்படுகிறது. நேற்று கோயில் மண்டபத்தில் வைத்து உண்டியல்களில் இருந்த காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன.

இதில், ரூ. 30 லட்சத்து 84 ஆயிரத்து 801 ரொக்கம், 134 கிராம் தங்கம், 330 கிராம் மற்றும் 800 மில்லிகிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக ெசலுத்தியது தெரியவந்தது. பணம் எண்ணும் பணியில் மதுரை, துலுக்கப்பட்டி, ராஜபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழுவினர், ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பணியை விருதுநகர் கோயில் ஆணையர் கணேசன், இருக்கன்குடி கோயில் ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Tags : Devotees ,Aiyankudy Mariamman temple Devotees ,Aiyankudy Mariamman Temple , Aiyankudy, Mariamman Temple, Undial Gift
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...