×

2020ம் ஆண்டு பூமியை வந்தடைய உள்ள ஜாக்ஸா விண்கல்லுக்கு அனுப்பிய ஹயபுஸா 2 விண்கலம்

ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா விண்கல்லுக்கு அனுப்பிய ஹயபுஸா 2 தனது ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிவருகிறது. கடந்த 2014 ஆண்டு ஹயபுஸா 2 என்ற ஆளில்லா விண்கலம் ரைகு என்ற விண்கல்லிற்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி ரைகுவுக்கு சென்றடைந்தது. விண்கல்லில் உள்ள பாறையின் மீது மோதி அதனை துளையிட்டு பல்வேறு மாதிரிகளை பூமிக்கு அனுப்பியது. இந்நிலையில் தற்போது ஆய்வுகளை முடித்துக்கொண்டு ஹயபுஸா 2 பூமிக்கு திரும்பி வந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒரு வருட பயணத்துக்கு பிறகு ஹயுபுஸா 2020 ஆம் ஆண்டு இறுதியில் பூமிக்கு வந்தடையும் எனக் கூறப்படுகிறது.


Tags : Jackson Meteorite , 2020, Earth, arrival, Hayabusa 2 spacecraft
× RELATED விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எஸ்...