தஞ்சை மத்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் புதிய சாதனை: 3டி பிரிண்டிங்கில் ஊட்டச்சத்து உணவு வகைகள்

தஞ்சை: இந்தியாவில் முதன்முறையாக தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்பத்தில் 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தில் உணவு வகைகள் தயாரிக்கும் தொழில் நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு முட்டையை கொடுக்கும் போது, சிலர் விரும்பி சாப்பிடுவர்; சிலர் மறுப்பர். இந்நிலையில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருக்களில் புதிய வகையாக உணவில் 3டி பிரிண்டிங் செய்து கொடுக்கப்படும்போது குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவர். அப்படிப்பட்ட தொழில்  நுட்பத்தை உருவாக்கியுள்ளது தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம்.

இந்த புதிய தொழில் நுட்பத்தின்படி, 3டி பிரிண்டிங்கில் உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. மேலும் நார் சத்து நிறைந்த ஊட்டச்சத்து மாவில் இருந்து குழந்தைகளுக்கு பிடித்த 3டி பிரிண்டிங் அச்சிடப்பட்ட சிற்றுணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதனைபோல், அரசி ஆலைகளில் பயனின்றி போக குடிய உடைந்த அரிசிகள் கொண்டு, புதிய வகை உணவுகளை 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தில் செய்கின்றன.

மேலும், பிற இறைச்சி உணவுகளையும் தேவையான வடிவில் 3டி பிரிண்டிங் செய்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் தொழில் நுட்பத்தையும் கண்டு பிடித்துள்ளனர். 3டி உணவு அச்சிடப்படுவது என்பது ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை அவரவர் விரும்பும் வகையில் வழங்கும் தொழில் நுட்பகமாகும்.

Related Stories: