×

தெலுங்கு நடிகர் ராஜசேகர் சென்ற சொகுசு கார் டயர் வெடித்து விபத்து....ராஜசேகர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்

செம்ஷாபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராஜசேகர் சொகுசு காரின் டயர் வெடித்த விபத்தில் அவர் உயிர் தப்பியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராஜசேகர் இன்று காலை படப்பிடிப்புக்காக விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்துக்கு தனது சொகுசு காரில் சென்று கொண்டிருக்கும் போது  செம்ஷாபாத் மண்டலம் பெத்த கோல்கொண்டா என்ற இடத்தில் அவரது சொகுசு காரில் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.  

அப்போது ராஜசேகர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரில் இருந்த ஏர் பலூன் சரியான நேரத்தில் செயல்பட்டதால் லேசான காயங்களுடன் நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரோந்து காவல்துறையினர் நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது கார் ஓட்டுநரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். 


Tags : Rajasekhar ,Rajasthan , Luxury car ,exploded , Telugu, actor Rajasekhar
× RELATED அரசு பேருந்துகள் நிறுத்தும் ஓட்டல்களில் உணவு பொருட்கள் இருமடங்கு விலை