அதிக நேரம் வேலை செய்வது ஆபத்தா?

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக இருப்பது முடி உதிர்தல். ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை, பரம்பரையாக இருக்கும் முடி உதிர்தல் பிரச்னை போன் றவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில் ‘‘அதிக நேரம் வேலை செய்வதால் முடி உதிர்கிறது...’’ என்று எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த மருத்துவப் பல்கலைக்கழகமான சுங்கியுன்குவான். 20 முதல் 59 வயதிலான 13 ஆயிரம் பேரை ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை செய்பவர்களை விட 52 மணிநேரம் வேலை செய் பவர்களுக்கு முடி அதிகமாக உதிர்கிறதாம். அதிக நேரம் வேலை பார்ப்பது உங்களின் வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அதிகரிக்கும். ஆனால், தலையை வழுக்கையாக்கிவிடும் என்று வேடிக்கையாகச் சொல்கிறது இந்த ஆய்வு. அடுத்து பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தப் போகிறார்கள்.

Related Stories: