கணவரின் இறப்புக்கு காரணமான நோயை விரட்ட தன் 5 குழந்தைகளையும் டாக்டராக்கிய ஏழைத்தாய்!

நன்றி குங்குமம்

வாழ்க்கையின் மீதான நம்பிக்கையையும், மன உறுதியையும் அளிக்கிறது ஜாஸ்மினின் அசாத்தியமான சாதனை. கேரளாவின் ஆலப்புழா மாநகராட்சியில் உள்ளது ஹரிபாத். இருபது வருடங்களுக்கு முன்பு அங்கே தனது கணவருடன் வசித்து வந்தார் ஜாஸ்மின். ஒரு நாள் திடீரென கணவருக்கு மாரடைப்பு ஏற்படவே அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் செய்தார்கள். ஆனால், அந்த மருத்துவமனையில் இதய சிகிச்சை நிபுணர் யாருமில்லை. அதனால் சரியான சிகிச்சை கிடைக்காமல் ஜாஸ்மினின் கணவர் இறந்துவிட்டார். அப்போது ஐஸ் ஃபேக்டரியை ஆரம்பிக்க 15 லட்ச ரூபாய் கடன் வேறு ஜாஸ்மினின் குடும்பத்துக்கு இருந்தது. தவிர, ஜாஸ்மினுக்கு ஐந்து குழந்தைகள். தந்தை இறந்தபோது மூத்த மகள் சியானா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஜெஸ்னா இரண்டாம் வகுப்பு, சாஸ்னா ஒன்றாம் வகுப்பு, ஜுல்பிகருக்கு இரண்டு வயது, கடைசியாக பிறந்த அக்பர் அலிக்கு வயது ஒன்று.

Advertising
Advertising

ஜாஸ்மினுக்கு குடும்பத்தை நடத்த வருமானம் எதுவும் இல்லை. கணவரை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த அவர். கான்வென்ட்டில் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு மாற்றினார்.குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது நான்கு குழந்தைகளையும் அனாதை விடுதியில் சேர்த்தார். வீட்டு வேலைகள் செய்து ஈட்டிய வருமானத்தில் தன்னையும், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டார். இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜாஸ்மினுக்கு ஒரு லட்சியம் இருந்தது. தனது ஐந்து குழந்தைகளில் ஒருவரை எப்படியாவது மருத்துவராக்கிட வேண்டும் என்பதுதான் அது! அதுவும் இதய சிகிச்சை நிபுணராக்க வேண்டும் என்ற உறுதி. தனது கணவருக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது என்ற நல்லெண்ணம். ஆனால், குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவு ஏற்பாடு செய்யவே வசதியற்ற நிலை. எதையும் பொருட்படுத்தாமல் தனது லட்சியத்தை நோக்கிப் பயணித்தார். இன்று அவரின் ஐந்து குழந்தைகளுமே மருத்துவர்கள்.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: