×

வேதாரண்யம் கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய நீலக்கால் நண்டுகள்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக நீலக்கால் நண்டு சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பாக்ஜலசந்தி கடல் பகுதியில் தற்போது மீன்பிடி சீசன் துங்கியுள்ளது. அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரகணக்கான மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள். இந்த 6 மாதகாலம் நடைபெறும் இந்த சீசன் காலத்தில் காலா, ஷீலா, வாவல், நீலக்கால், நண்டு, இறால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகை மீன்கள் பிடிக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேராளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா, சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.

தற்போது கோடியக்கரையில் சீசன் துவங்கி உள்ள நிலையில், வெளி மாவட்டங்களிலிருந்து பைபர் மற்றும் விசைபடகுகள் 100க்கும் மேற்பட்ட படகுகள் கோடியக்கரைக்கு வந்துள்ளன. நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட பைபர் விசைபடகுகளும், கோடியக்கரையிலிருந்து காலை மற்றும் மாலைவேலைகளில் மீன்பிடிக்க செல்கின்றனர். இதேபோல் வங்காளவிரிகுடா கடற்பகுதியில் அமைந்துள்ள ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், பெரியகுத்தகை, வௌ்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கடற்கரை பகுதியிலும் மீன்பிடி தொழில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வங்காள விரிகுடா, பாக்ஜலசந்தி ஆகிய இரு கடல் பகுதிகளிலும் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் நீலக்கால் நண்டும், புள்ளிநண்டும் சிக்கின. நீலக்கால் நண்டு கிலோ ரூ.320க்கும், புள்ளிநண்டு ரூ.160க்கும் விலைபோனது. கோடிக்கரையில் நீலக்கால் நண்டுகள் அங்கிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் ஐஸ்கிரீம் செய்வதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நண்டுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Fishermen ,Kodaikanayam , Crabs
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...