×

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதல்வரின் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை, அதை நான் வழிமொழிகிறேன்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், அவர்களுக்கு சிவாஜி கணேசனின் நிலைமை தான் வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும், அதை தான் வழிமொழிவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர் ஜோதி நடைபயணத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஜெயலலிதா பேரவையினர் தொடங்கி உள்ளனர். இதற்காக 1000 அதிமுக தொண்டர்களுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை சிந்தாமனியில் இருந்து நடைபயணத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்த நடைபயணம் 5 நாட்கள் மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 30 லட்சம் மக்கள் சந்திப்பாக நடைபெற உள்ளது.

தொடர் ஜோதி நடைபயணத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகள் தீர்க்கப்படும். பட்டா வழங்குதல் மற்றும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என் கூறினார். அப்போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதல்வரின் கருத்து தொடர்பாக அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிதத அமைச்சர், நடிகர்கள் அரசியலுக்கு வரும் விவகாரத்தில் முதல்வர் ஒரு கருத்து சொன்னால், அத மிகச்சரியானதாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை என்று தெரிவித்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியை அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், கமல்ஹாசன் வயது முதிர்வு காரணமாக அரசியலுக்கு வந்துள்ளதாகவும், நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : RB Udayakumar ,chiefs ,actors ,politicians ,Chief Minister , Actors, Politics, Shivaji, Chief Minister, RB Udayakumar
× RELATED சொல்லிட்டாங்க…