ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 22ம் தேதி தடை : உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 22ம் தேதி தடை விதித்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை

*கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் எம்.அப்பாவு, அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டனர்.

*இதில், இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

*இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

*இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடைசி 3 சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்ததோடு அவற்றை தற்போது எண்ணியும் முடித்துள்ளது.

*இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இன்பதுரை தரப்பில் கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவில்; ராதாபுரம் தொகுதி தேர்தல் விவகாரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை என்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய முடியாது.ஆனால் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டாலும் அதன் முடிவை மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டிருந்தது.

*இதனிடையே முந்தைய விசாரணையின் போது,  ராதாபுரம் தொகுதி தொடர்பான வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பின்னர்  நவம்பர் 13ம் தேதி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். அதுவரை வழக்கில் தற்போது உள்ள நிலை தொடரும் என உத்தரவிட்டார்.

தடை 22ம் தேதி வரை நீட்டிப்பு

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை கோரிய வழக்கை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும் என்றும் இது தகுதிநீக்க வழக்கு இல்லையே என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து இன்பதுரை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இன்பதுரை தரப்பு வழக்கறிஞர், செல்லாத ஓட்டுக்களை எண்ணினால், தோல்வியடைய நேரும் என்றும் முறையாக இல்லாத ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால், 49 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும்  வாதிடப்பட்டது. இதையடுத்து ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 22ம் தேதி தடை விதித்து, வழக்கு விசாரணையை 22ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: