மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி....மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆவதாக புகார்

மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த செந்தில்குமார்- ராஜமீனா தம்பதியின் மகள் தியாஷினி உயிரிழந்த சிறுமி ஆவர். மூன்று நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த தியாஷினிக்கு ரத்த பரிசோதனையில் டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.  இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுள்ளார்.

வில்லாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் டெங்கு நிமோனியா உள்ளிட்ட காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது .

Related Stories: