×

காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் : பயங்கரவாதத் தலைவர் சுட்டுக் கொலை; ஹமாஸ் இயக்கத்தினரும் குண்டு மழை பொழிந்து பதிலடி

ஜெருசலேம் : காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முக்கிய தளபதி பஹா அபு எல் - அட்டா கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பிஜேஜே என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி பஹா அபு எல் - அட்டாவை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நேற்று காஸாவில் வடக்குப் பகுதியில் திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். அவர் தங்கியிருந்த வீட்டின் மீது சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் அல் அட்டா, அவரது மனைவி உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஹாமாஸ் அமைப்பினர் வான்வழி தாக்குதல் மேற்கொண்டனர்.

டமாஸ்கஸ் உள்ளிட்ட  நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்தனர். வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாகின. ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி பஹா அபு எல் - அட்டா, அண்மை காலமாக இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏராளமான ஏவுகணை தாக்குதல்களுக்கு காரணம் என்று பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு தாக்குதல்களை நடத்த பஹா அபு எல் - அட்டா திட்டமிட்டு இருந்ததால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சர்வதேச அளவில் ஆதரவு பெற்ற பாலத்தீனிய அதிகார சபையில் இருந்து 2007ம் ஆண்டு காஸாவை ஹமாஸ் கைப்பற்றியது முதல் இஸ்ரேல்- காஸா இடையே மோதல் நீடித்து வருகிறது. 2014ம் ஆண்டு 50 நாட்கள் நீடித்த போரில் பெருமளவு உயிர் மற்றும் உடமைகள்ச் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : air strike ,terrorist leader ,Gaza ,Israeli ,militants ,Hamas ,bombing , Gaza, Israel, Military, Aerial, Attack, Commander, Baha Abu El - Ata, BJJ, Shot.
× RELATED இஸ்ரேல் ஏற்படுத்திய பேரழிவுக்கு...