எஞ்சின் இல்லாத வாகனத்தை தள்ளிச் சென்றவருக்கு தலைக்கவசம் இல்லை என்று அபராதம்...வைரலாகும் வீடியோ

சிதம்பரம்: எஞ்சின் இல்லாத இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தவரை தலைக்கவசம் அணியவில்லை என்று போலீசார் அபராதம் விதித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு கடை வீதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது எஞ்சின் இல்லாமல் வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரிடம் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறிய போலீசார் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அபராதத்தை செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

முறையான ரசீதை கொடுத்தால் பணத்தை வங்கியில் செலுத்த வசதியாக இருக்கும் என தெரிவித்த இளைஞரை உதாசீனப்படுத்திய போலீசார் வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு கூடுதலாக அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: