×

நான் ஒரு... மந்திரிங்க...!

இப்போதெல்லாம் எந்த விஷயமானாலும் கிண்டலாக மீம்ஸ் வந்து விடும். மொபைலில் இலவச காமெடியே இது தான். ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை நம் ’மாண்புமிகு’அமைச்சர்கள் இருக்கும் போது இந்த மீம்ஸ் எல்லாம் தோற்றுப்போகும் என்பது தான் பலருக்கும் உள்ள திடமான நம்பிக்கை. முன்பெல்லாம் எப்போதாவது தான் மந்திரிங்க ஜோக்ஸ் கிடைக்கும். இப்போது தடுக்கி விழுந்தால் போதும், ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரியாவது ஏதாவது தமாசு பண்ணாமல் இருப்பதில்லை என்று மக்கள் பேசும் அளவுக்கு நிலைமையை இப்போதுள்ள தமிழக அமைச்சர்கள் ஏற்படுத்தி விட்டனர். நேற்று மட்டும் இரண்டு அமைச்சர்கள் அடித்த கமென்ட்களை பார்த்தால் சீரியஸ் காமெடி  என்று வேண்டுமானாலும் சொல்லலாம். குரூர தமாசு என்றும் சொல்லலாம். ஒருவர், மொபைல் கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பரை கொண்டு வா, மிதிக்கோணும்ன்னு கொதிக்கிறார். இன்னொருத்தரோ, ஆக்சிடெண்ட்டெல்லாம் ஜகஜமுங்க...இறந்துட்டா இரங்கல் சொல்லப் போறோம்’ன்னு சொல்கிறார்.

செல்போன் கண்டுபிடிச்சவன் கையில கிடைச்சா தூக்கிப்போட்டு மிதிக்கணும்...
காரைக்குடி அருகே செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் பேசுகிறார்: ‘இன்னிக்கு செல்போன் பயன்பாடு மிகவும் அதிகரிச்சிருச்சு. ரோடுல போனா செல்போன் பேசுறவங்க அவங்களாகவே பேசிக்கிட்டும், சிரிச்சுக்கிட்டும் போறாங்க. இந்த செல்போனை கண்டுபிடிச்சவங்கள,  கையில் கிடைத்தால் தூக்கிப்போட்டு மிதிக்கோணும் போல தோணுது; செல்போனை மாணவர்கள் தவறாக தான் பயன்படுத்துறாங்க; படிக்க மாட்டேங்கறாங்க’’என்று பொரிந்து தள்ளினார். இவர் ஆதங்கத்தை சொல்லி விட்டார். ஆனால், இவர் தூக்கிப்போட்டு மிதிக்க தோணும் செல்போன் கண்டுபிடித்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பர் அமெரிக்காவை சேர்ந்தவர்; அமைச்சரின் இந்த பேச்சு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ேவகமாக வைரலாகி வருகிறது.

விபத்து நடக்கத்தான் செய்யும்... இறந்தவங்களுக்கு அனுதாபம்... இரங்கல் ெசால்வோம்ல...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று தரிசனம் செய்த பின் பால் வளத்துறை cc அளித்த பேட்டி அளித்தார். கோவையில் அதிமுக கொடி கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்திருப்பது குறித்த ேகள்விக்கு அவர் அளித்த பதில்: விபத்துகள் என்பது அனைத்தஇடங்களிலும் நடக்கக்கூடிய இயல்பான ஒன்று. விபத்துகளில் பாதிக்கிறவர்களுக்காக வருத்தப்படுகிேறாம், அனுதாபப்படுகிறோம்; இறந்தவங்களுக்கு இரங்கல் சொல்கிறோம். என்றாரே பார்க்கலாம். அமைச்சரின் இந்த பதில் அங்கிருந்த மக்களை மட்டுமல்ல, அதிமுகவினரையே அதிர்ச்சியடைய வைத்தது. சென்னையில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் குடும்ப திருமண விழாவுக்காக வைத்த பேனர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் லாரி ஏற்றி சுபஸ்ரீ என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் பரிதாபமாக இறந்தார்.

அப்போது பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஐகோர்ட் எச்சரித்த பின்னர் முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டார். அப்போது ஒரு பேட்டியில் மூத்த அதிமுக தலைவர் பொன்னையன் கூறுகையில், ‘அவரு வேணுமின்னா பேனரை தள்ளிவிட்டாரு; காற்று வந்து தள்ளிட்டுது; அவரு மேல கேஸ் போட்டா நியாயமா? தள்ளிவிட்ட காற்று மேல இல்லே கேஸ் ேபாடணும்’ ன்னு சொன்ன போதே பலரும் டென்ஷன் ஆகி விட்டனர். இப்போது முதல்வர் விழா ெகாடிக்கம்பம் விழுந்து லாரி விபத்தில் பெண் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த விபத்து பற்றி இப்படி ஒரு பொறுப்பான அமைச்சரே சீரியஸ் காமெடி பண்ணலாமா என்று மக்கள் கொதிக்கின்றனர். இன்னும் என்னென்ன காமெடியெல்லாம் ஆட்சி முடிகிற வரை கேட்கணுமோ என்று ஓட்டு போட்ட மக்கள் தான் வேதனைப்படுகின்றனர்.

Tags : Minister Baskaran, Minister Baskaran
× RELATED மழை காரணமாக தொற்றுநோய் ஏற்படாமல்...