பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் மாநாடு தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை பலப்படுத்தும்: பிரதமர் மோடி அறிக்கை

புதுடெல்லி:  பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. பிரிக்ஸ் அமைப்பின் 11வது உச்சி மாநாடு பிரேசிலில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.  இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று அவர் பிரேசில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெறும் உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரிக்ஸ் தலைவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதை எதிர்நோக்கி உள்ளேன்.

பிரிக்ஸ் நாடுகள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும்’ என்று கூறியுள்ளார். இந்த மாநாட்டின் இடையே பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவையும் பிரதமர் மோடி சந்தித்து, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசுகிறார். இது, மோடி பங்கேற்கும் 6வது பிரிக்ஸ் மாநாடாகும். கடந்த 2014ம் ஆண்டு பிரேசிலின் போர்ட்லேசாவில் நடந்த மாநாட்டில் முதன் முறையாக அவர் கலந்து கொண்டார்.

Related Stories: