புதுடெல்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் 8 உள்கட்டமைப்பு துறைகளாகும். குறிப்பிட்ட கால கட்டத்தில் தொழில் பிரிவுகளின் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் அளவிடப்படுகிறது. இந்நிலையில், 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் தொழில்துறை உற்பத்தி பெரும் சரிவை சந்தித்து உள்ளதாக புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.