×

டிவிட்டரிலிருந்து குஷ்பு விலகல்

சென்னை: டிவிட்டரில் தொடர்ந்து தனது கருத்துகளை வெளியிட்டு வந்தார் குஷ்பு. காங்கிரஸ் கட்சியில் இருப்பதால், தனது அரசியல் கருத்துகளையும் அவர் டிவிட்டரில் பதிவு செய்து வந்தார். இன்று (நேற்று) திடீரென அவர் டிவிட்டரிலிருந்து விலகியுள்ளார். இதுபற்றி குஷ்பு கூறும்போது, ‘எனது டிவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். இனி டிவிட்டர் தளத்தில் இயங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.

இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவுமில்லை. நிம்மதியாக வாழ  விரும்புகிறேன். டிவிட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை விஷயங்களே உள்ளன. ஆகவே,  நான் எனது இயல்பில் இல்லை’ என்றார். இதற்கு முன்பு ஒருமுறையும் அவர் டிவிட்டரிலிருந்து விலகியிருந்தார். பிறகு மீண்டும் அதில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Khushboo ,departure , Twitter, Khushboo, Dissociation
× RELATED கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு...