சில்லி பாயின்ட்...

* விஜயநகரம், ஆந்திரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் சர்வீசஸ் அணிக்கு எதிராக நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், கர்நாடகா அணியின் கேப்டன் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 129 ரன் (54 பந்து, 12 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசினார். இப்போட்டியில் கர்நாடகா 80 ரன் வித்தியாசத்தில் வென்றது. கர்நாடகா 20 ஓவரில் 250/3; சர்வீசஸ் 20 ஓவரில் 170/7.

* கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிங்சில் ஈடுபடுபட்டால் 10 ஆண்டு சிறை என இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.

* பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் லெவன் முதல் இன்னிங்சில் 428 ரன் குவித்த நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணி 122 ரன்னில் சுருண்டது.

Related Stories: