சென்னை: ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் துபாய் அரசு சார்பில் 6வது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் துபாயில் கடந்த 8, 9 தேதிகளில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக குத்துச்சண்டை வீரர் ஜி.செந்தில்நாதன் தங்கப் பதக்கம் வென்றார்.தாயகம் திரும்பிய அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், உறவினர் மற்றும் பயற்சியாளருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தாலும், பாக்சிங்கில் சாதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. என்னைப் போன்ற வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
இங்கே குத்துச்சண்டை வீரர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சரியான ஆதரவு கிடைத்தால் இன்னும் பல போட்டிகளில் பங்கேற்று, இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று பெருமை சேர்ப்பேன். நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால், உரிய வேலை கிடைக்கவில்லை. எனவே சென்னை மாநகராட்சியிலாவது எனக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.துபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்
- துபாய் சர்வதேச குத்துச்சண்டை தங்க வெற்றியாளர்
- செந்தில்நாதன்
- சென்டினல் நாதன் துபாய் சர்வதேச குத்துச்சண்டை