×

உள்ளாட்சி தேர்தல் பணிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

சென்னை: சென்னை, கோயம்பேட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளது. இங்கு, திமுக அமைப்பு செயலாளரும், ராஜ்ய சபா எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சி மன்றத் தேர்தலை தனித்தனியாக பிரித்து நடத்தக்கூடாது, ஒவ்வொரு வருவாய் கூட்டத்திற்கும் ஒரு அரசு அதிகாரியை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில  தேர்தல் ஆணையரைச் சந்தித்துப் பேசினார். பிறகு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல், ஊராட்சி தேர்தல், அதன்பிறகு மாநகராட்சி, நகராட்சி என்று தனித்தனியாக தேர்தல் நடத்த ஆலோசனை நடப்பதாக தகவல் வருகின்றது.   இதை எந்த காலகட்டத்திலும்  ஏற்கமுடியாது. கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி தேர்தல் நடைபெறுமானால் நிறைய தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது.

அதேபோல இத்தேர்தலை பார்வையிடவும் கண்காணிக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு போதிய அவகாசம் இல்லாததால், ஒவ்வொரு வருவாய் கோட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதுமட்டுமின்றி கிராம மக்கள் 4 ஓட்டுகள் போட வேண்டியுள்ள சூழலில்  2 ஓட்டுகளை எண்ணிவிட்டு அடுத்த 2 ஓட்டுகளை எண்ணுவதற்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் வழியிலேயே பெட்டி மாற்றம் போன்ற பல்வேறு தவறுகள் நடைபெறுகிறது. எனவே, 4  பெட்டிகள் வைத்து தனித்தனியாக ஓட்டுப்போட செய்தால் சரியாக இருக்கும்.  சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


Tags : RS Bharathi ,CCTV , Local elections, CCTV cameras, RS Bharati
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...