×

பொருளாதார தேக்க நிலையிலிருந்து நாட்டை மீட்க பாஜ அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய அளவில் மக்களை பாதித்து வருகிறது. தொழில் வளர்ச்சி கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவான அளவாகும்.  உற்பத்தி வளர்ச்சி விகிதம்  அக்டோபர் 2014ம் ஆண்டு முதல் மிகமிக குறைவாக மைனஸ் 1.2 சதவீதமாக இருக்கிறது. முக்கிய துறைகளின் வளர்ச்சி நான்கு ஆண்டுகளிலேயே மிகவும் குறைவாக இருப்பது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து விட்டது. மூலதனப் பொருட்களின் வளர்ச்சி மைனஸ் 21 சதவீதமாகக் குறைந்து விட்டது. பயணிகள் வாகன விற்பனை 23.7 சதவீதம் குறைந்துள்ளது.  இத்தகைய பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், மத்திய பாஜ அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.


Tags : government ,BJP ,country ,KS Alagiri BJP ,KS Alagiri , Economy, Bjp Government, KS Alagiri
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்