கோவை பெண்ணுக்கு ஜெர்மனி வாலிபருடன் காதல் திருமணம்: தமிழ் கலாசாரப்படி நடந்தது

கோவை: ஜெர்மனி வாலிபருக்கும், கோவை பன்னிமடையை சேர்ந்த பெண்ணிற்கும் தமிழ் கலாசாரப்படி நேற்று திருமணம் நடந்தது.  கோவை   துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையை சேர்ந்த சுப்ரமணியம், கலாவதி ஆகியோரின்   மகள் வித்யபிரபா(28). கம்ப்யூட்டர் இன்ஜினியர். ஜெர்மனி நாட்டில் உள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷீல்டஸ் என்பவரின் மகன்  மைக்கேல் ஷீல்டஸ் (29) என்பவருடன் வித்யபிரபாவிற்கு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம்   செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து, இருவர் வீட்டாரிடம் பேசி   சம்மதம் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, மைக்கேல் ஷீல்டஸ், வித்யபிரபா   ஆகியோருக்கு கோவை வெள்ளக்கிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்   தமிழ் கலாசாரப்படி நேற்று திருமணம் நடந்தது. ஜெர்மனி வாலிபர் வேஷ்டி,  சட்டை  அணிந்து இருந்தார். திருமணத்திற்கு மைக்கேல் ஷீல்டஸ் குடும்பத்தினர்   வரமுடியாததால், வித்யபிரபாவின் தாய் மாமா கனகராஜ், பார்வதி ஆகியோர்   மணமகனின் பெற்றோராக இருந்து சடங்குகளை செய்தனர். இதில், பாதபூஜை,   மலர் வாழ்த்துதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டது. இந்த   திருமணத்தில் ஜெர்மனியில் இருந்து மைக்கேல் ஷீல்டஸ் நண்பர்கள் கலந்து   கொண்டனர். அவர்களும் திருமண விழாவின்போது தமிழ் கலாசார உடை அணிந்து   விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories: