×

குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக 72 நாட்களில் முடிவை வெளியிட்டு டி.என்.பி.எஸ்.சி. சாதனை

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்கிராம நிர்வாக அலுவலர் 397 பணியிடங்கள், இளைநிலை உதவியாளர் 2688, வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் என மொத்தம் 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்கள்  உள்ளதாகவும் எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஜூன் 14-இல் வெளியானது. இந்த தேர்வுக்கு ஜூலை14ம் தேதி வரை அவகாசம்  அளிக்கப்பட்டது.

மொத்தம் 16 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. எழுத்துத் தேர்வை எழுதுவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை டிஎன்பிஎஸ்சி  அதிகாரிகள் விதித்திருந்தனர். செல்போன் மற்றும் வாட்ச், மோதிரம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பொருள் வைத்திருப்போரை தேர்வு எழுத அனுமதி கிடையாது. மேலும் அவர்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு  எழுத பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும். வண்ண எழுதுகோல், பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், வரைபட கருவிகள், பாடப்புத்தகங்கள் ஆகியவற்றைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.

6,481 பணியிடங்களுக்கான நடைபெறும் தேர்வை மாநிலம் முழுவதும் 5,575 தேர்வு மையங்களில் 16,29,864 பேர் எழுதினர். எழுத்துத் தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 405 தேர்வு மையங்களில்  1,25,281 பேர் குரூப்-4 தேர்வை எழுதினர். தேர்வு கண்காணிப்புப் பணியில் மாநிலம் முழுவதும் 81,500 பேர் ஈடுபட்டனர். அதில், 7,09,103 பேர் ஆண்கள், 9,20,725 பெண்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், செப்டம்பரில் நடைபெற்ற குரூப்-4 தேர்வுகளுக்கான முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. மேலும், தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு டி.என்.பி.எஸ்.சி., சாதனை படைத்துள்ளது.  www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற இணையதளங்களில் தேர்வர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி அறிக்கை:

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப் - 4 தேர்வை 16,29,865 பேர் எழுதியிருந்தனர். தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குறைவான நாட்களில்  தேர்வு முடிவுகளை வெளியிடுவது தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதன்முறை. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் மூலம் மட்டுமே  விவரங்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : Group-4 Selection Results Release: A History of the Selection Record , Group-4 Selection Results Release: For the first time in the history of selection Record
× RELATED வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை