மராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ள விதம் கண்டனத்துக்கு உரியது: காங்கிரஸ் கருத்து

மும்பை: மராட்டியத்தில் ஆட்சியமைப்பது குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார், ப்ரபுல் படேல் காங்கிரஸ் மல்லிகார்ஜுன் கார்கே, அகமது படேல், வேணுகோபால் பேட்டியளித்துள்ளனர். நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மராட்டிய தேர்தலில் போட்டியிட்டோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ப்ரபுல் படேல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல் குறித்தது விவாதிக்கப்பட்டது. மராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ள விதம் கண்டனத்துக்கு உரியது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கிவிட்டது பாஜக ஆட்சி என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மராட்டியத்தில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் சில ஐயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நினைக்கிறார் என்று அகமது தெரிவித்தார். மராட்டியத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியை ஆளுநர் அழைக்கவில்லை என்று அகமது படேல் தெரிவித்துள்ளார்.

Related Stories: