நாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை

நாகர்கோவில்: ரூ.3000 லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ரகுபதிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளத்தில் 2012ம் ஆண்டு உதவி ஆய்வாளராக ரகுபதி பணியாற்றியபோது லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது.  ரகுபதி ஒரு புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ஜான் தேவ சிங் என்பவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளார்.

Related Stories:

>