சென்னை தலைமை செயலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஸ்மிரிதி இராணி சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பானது சென்னை தலைமைச் செயலகத்தில் சற்று முன்னர் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிரிதி இராணி அவர்கள், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார். அவர் தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த சந்திப்பின்போது குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது.

அதில் குறிப்பாக நிர்பயா என்ற திட்டத்தின் மூலமாக அனைத்து மாநிலங்களிலும் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற திட்டங்கள் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது ஜவுளித்துறையில் சமர்த் என்ற திட்டத்தின் கீழ் 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயற்சி வழங்க 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திறன் மேம்பாட்டு பயற்சி மற்றும் 1,300 கோடியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, தமிழக ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோரும் உடன் இருக்கின்றனர். இந்நிலையில், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆலோசனைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி அவர்கள், முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, செய்தியாளர் சந்திப்பின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனையின் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி விரிவாக எடுத்துரைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>