கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு இதுவரை மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு, நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட்ட சீரமைப்பு பணிகள் பற்றி தலைமைச் செயலர் சண்முகம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கஜா புயல்!!

தமிழகத்தில் கஜா புயல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ம் தேதி தாக்கியதில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர்  உட்பட 12 மாவட்டங்கள் கடும்  பாதிப்பை சந்தித்தன. 63க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்கள் சேதமடைந்தன. இந்த சேதம் பற்றி மத்திய குழுஆய்வு செய்து முடித்து நிலையில், தமிழகத்துக்கு கஜா புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதேநேரம் மறுசீரமைப்புக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதுடன் கணிசமான நிதியும் ஒதுக்கப்பட்டது.

சீரமைப்பு பணிகள் பற்றி தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட்ட சீரமைப்பு பணிகள் பற்றி தலைமைச் செயலர் சண்முகம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கஜா புயல் பாதிப்புக்கு பின் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நிவாரணப் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

Related Stories:

>