மராட்டியதை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பாஜகவுக்கு பின்னடைவு : பாஜகவை கழற்றிவிட்டு கூட்டணி கட்சிகள் தனித்துப் போட்டி

ராஞ்சி : மராட்டியதை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாஜகவை கூட்டணி கட்சிகள் கழற்றிவிட்டுள்ளதால் அக்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் 30ம் தேதி முதல் 5 கட்டங்களாக c நடைபெறும் ஜார்க்கண்டில் பாஜக வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலே அக்கட்சிக்கு பின்னடைவாக மாறியுள்ளது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 52 தொகுதிகளுக்கு பாஜக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்ததால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி மற்றும் அனைத்து  ஜார்க்கண்ட் மாணவர் சங்கக் கட்சி ஆகியவை பாரதிய ஜனதா முடிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

கூட்டணி கட்சிகளுக்கு பெயருக்கு தொகுதி ஒதுக்குவதை ஏற்க முடியாது என கூறியுள்ள லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான், தங்களது கட்சி 50 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்று கூறியுள்ளார். அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கட்சியும் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக போட்டியிடும் லோகத்தகா தொகுதிகளிலும் ஏஜேஎஸ்யு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வது கேள்விக்குறியாக உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளும் கழற்றிவிட்டு இருப்பது கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் நடைபெற்ற மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இருந்து வரும் பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடப்பதற்கு முன்பே பாஜக பின்னடைவை சந்தித்து இருப்பது அக்கட்சித் தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related Stories: