×

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் 90,000 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்

சென்னை: உதய் திட்டத்தில் சேர்ந்த பிறகும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் 90,000 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, மின்கட்டணம் மற்றும் மத்திய அரசு மானியம் என ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைக்கிறது. ஆனால், எரிபொருள் கொள்முதல், மின் கட்டணத் தள்ளுபடி மற்றும் மானியம், ஊழியர்களின் ஊதியம் என பெரும் தொகை செலவாவதால் மின்வாரியம் கடனில் சிக்கித் தவிக்கிறது.

இதை சரிசெய்ய மத்திய அரசு உதய் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், மின்வாரியங்களின் மொத்தக் கடனில் 75 சதவிகிதத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது 81 ஆயிரம் கோடியாக இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் தற்போது 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வர்தா மற்றும் கஜா புயல் பாதிப்புகளால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுபோன்ற பல காரணங்களால்தான் மின்சார வாரியத்தின் கடன் அதிகரித்திருப்பதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu Electricity Board , Tamil Nadu , Electricity Board's , debt , Rs,90,000 crores
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி