×

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மின்இணைப்பை துண்டித்ததாக மக்கள் புகார்

சென்னை : சென்னை அருகே பெரும்பாக்கத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் 1,000 க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த 18 மாதங்களாக முறையாக கணக்கீடு செய்யாமல் தற்போது திடீரென அபராதத்துடன் மின்கட்டணம் செலுத்த கூறுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ரூ.2000 முதல் 12,000 வரை மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் வற்புறுத்துவதாகவும், மின் கட்டண அட்டைகளை தரவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.


Tags : Chennai , People complain, power lines , Chennai, disconnected
× RELATED ஒருங்கிணைந்த காஞ்சிபுரம்...